» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்!
புதன் 11, ஜூன் 2025 4:11:22 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், மலையாளமேடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இன்று நடைபெற்ற சிறப்புகால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 108 முகாம்கள் நடத்தப்படும்.
முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினைசரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிட்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இன்று நடைபெறும் முகாம் 11.06.2025 இன்று முதல் 18.03.2026 வரை நடைபெறவுள்ளது.
மே 2025 முதல் மார்ச் 2026 வரை கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் சிறந்த மூன்று விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு, சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாம்கள் நடத்தப்படும் கிராமங்களில் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சங்கரநாராயணன், திருநெல்வேலி கோட்ட உதவி இயக்குநர் மரு.சுமதி, பிரதம மருத்துவர் முருகன், உதவி மருத்துவர்கள் மாரியப்பன், அப்துல் காதர், சரண்யா, ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுறை வார்டு உறுப்பினர்கள் முருகன், மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
