» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி உட்பட தமிழ்நாட்டில் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்!
வியாழன் 12, ஜூன் 2025 10:20:42 AM (IST)
தமிழகம் முழுவதும் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இடமாற்றம்:
1) மகேஷ்குமார் - டி.ஐ.ஜி. ஆக இருக்கும் இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். தற்போது கடலோர பாதுகாப்புக் குழும டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
2) ஜெயந்தி- கடலோர பாதுகாப்புக் குழும டி.ஐ.ஜி. ஆக பணியாற்றும் இவர், சென்னை தொழில்நுட்பப்பிரிவு டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
3) சிபி சக்கரவர்த்தி- தென்சென்னை இணை கமிஷனராக பணியாற்றும் இவர், தமிழ்நாடு காகித ஆலை தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
4) கல்யாண்- சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக உள்ள இவர், தெற்கு மண்டல இணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.
5) திஷா மிட்டல்- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆக உள்ள இவர், சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
6) உமா- சேலம் சரக டி.ஐ.ஜி. ஆக பணியாற்றும் இவர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
7) நாகஜோதி- மாநில குற்ற ஆவண காப்பக சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டாக பொறுப்பேற்க உள்ளார்.
8) அமனத்மான்- காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர், மனித உரிமை மற்றும் சமூகநீதி உதவி ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
9) லாவண்யா- போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக சென்னையில் பணியாற்றும் இவர், மாநில குற்ற ஆவண காப்பக சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
10) பி.கீதா- சேலம் தலைமையக துணை கமிஷனராக பணியில் உள்ள இவர், சென்னை தலைமையக துணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.
11) வி.கீதா- திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக உள்ள இவர், சேலம் தலைமையக துணை கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார்.
12) வேல்முருகன்- சேலம் தெற்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், தாம்பரம் கமிஷனரகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13) பிரபாகர்- தாம்பரம் கமிஷனரகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள இவர், சென்னை சைபர் குற்றப்பிரிவு சூப்பிரண்டாக பதவியேற்க உள்ளார்.
14) அருண் கபிலன்- நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி. ஆக பதவியேற்க உள்ளார்.
15) செல்வக்குமார்- மதுரை சிவில் சப்ளை சி.ஐ.டி. சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி உயர்வுடன் இடமாற்றம்:
16) சுப்பிரமணிய பாலச்சந்திரா- தேனி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சேலம் தெற்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
17) சாமுவேல் பிரவீன் கவுதம்- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரியும் இவர், பதவி உயர்வு பெற்று, திருப்பூர் நகர வடக்கு துணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.
18) பிரசன்னகுமார்- நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று நெல்லை மேற்கு துணை கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
