» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்தார் சபாநாயகர்!
வெள்ளி 13, ஜூன் 2025 12:46:34 PM (IST)

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், முன்னிலையில் இன்று (13.06.2025) தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அவர் தெரிவித்ததாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, கொடுமுடியாறு நீர்த் தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 2548.94 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார்பருவ சாகுபடிக்காக 13.06.2025 முதல் 10.10.2025 வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடவும், அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2548.94 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை, வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஓன்றுக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர்வரத்து மற்றும் இருப்பை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.
மேலும் எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர் பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப்பெறவில்லையென்றால் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சிமுறையில் வழங்கப்படும் எனவும். நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் நீர் வினியோக பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் மணிகண்டராஜன், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் யோகேஸ்வரன், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் (பொ) சிவகாமசுந்தரி, களக்காடு நகாட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், நாங்குநேரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் பாஸ்கர், மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
