» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிா்வாகம் தகவல்
புதன் 18, ஜூன் 2025 11:20:05 AM (IST)
கூட்ட நெரிசலைக் குறைக்க, விழுப்புரம் - ராமேஸ்வரம், சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்ட நெரிசலைக் குறைக்க, விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவேக சிறப்பு ரயிலானது (06109) வரும் 21, 22, 28, 29-ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - விழுப்புரம் இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவேக சிறப்பு ரயிலானது (06110) வரும் 21, 22, 28, 29 ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட்டு ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம் வழியாக விழுப்புரத்துக்கு இரவு 10.35 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் விழுப்புரத்திலிருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு, காலை 11.40 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடைகிறது.
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி அதிவேக சிறப்பு ரயிலானது (06089) வரும் 21-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. மறுமாா்க்கமாக, திருநெல்வேலி - சென்னை எழும்பூா் அதிவேக சிறப்பு ரயிலானது (06090) வரும் 22-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு இரவு 9.55 மணிக்கு சென்றடைகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
