» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சீலாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் : ராதாபுரம் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
புதன் 18, ஜூன் 2025 11:26:30 AM (IST)

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் ராதாபுரம் தாலுகா சட்டப் பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராதாபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குபேர சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். கும்பிகுளம் ஊராட்சி சார்பில் பொன்னாடை அணிவித்து நீதிபதியை கவுரவித்தனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் இசக்கியப்பன் மற்றும் சக வழக்கறிஞர்கள் சட்டப்பணி ஆணைக்குழுவின் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
சிறப்புரையாற்றிய நீதிபதி குபேர சுந்தர் சட்டப்பணி ஆணைக்குழு மூலம் நீதிகளை நாம் எப்படி பெற முடியும், நம் உரிமைகளை பெறுவதற்கு சட்டத்தில் என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பதை மிகவும் எளிமையாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
