» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மகளிர் உரிமைத்துறையில் தற்காலிக பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
புதன் 18, ஜூன் 2025 3:16:01 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் வள்ளியூர் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளைத் தடுக்கும் நோக்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) இயங்கி வருகின்றது.
அதில் சுழற்சி முறையில் வழக்கு பணியாளர்-1 பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தினர் ஆகிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றவும், அவர்களின் பாதுகாப்பிற்கான உதவி எண்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு போன்றவற்றிற்கான விழிப்புணர்வு வழங்கிட செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தரவு நுழைவு பணியாளர் -1.
(Data Entry Operator) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் https://tirunelveli.nic.in/ என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு ஜீன் 30-ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
