» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம்
புதன் 18, ஜூன் 2025 7:45:06 PM (IST)

பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம் பாலபாக்யா ஹாலில் நடந்தது.
தேசிய நல்லாசிரியர் சு. செல்லப்பா தலைமை வகித்தார். சமூக சேவகர் வெங்கடராமன் முன்னிலை வகித்தார். தேசிய சிந்தனைப் பேரவையின் தென் தமிழக அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றார். பிரக்ஞா பிரவாஹ் தென்பாரத அமைப்பாளர் விஸ்வநாதன், மூத்த பத்திரிக்கையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
கவிஞர் லெட்மிமணி வண்ணன் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சி நாதனின் வாரிசுகள் ஹரிஹர சுப்பிரமணியன், ஹரி வாஞ்சி கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய சிந்தனைப்பேரவை தமிழக அமைப்பாளர் முரளி அறிமுக உரை நிகழ்த்தினார். தேசிய சிந்தனைப் பேரவையின் நெல்லை மாவட்ட அமைப்பாளர் இசக்கி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
