» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வு பயம் நீக்கும் சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மாணவர் பயிற்சியாளர் நடிகர் தாமு உரையாற்றினார். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இப்பயிலரங்கத்தில் 12ம் வகுப்பில் (2024-2025 கல்வி ஆண்டில்) அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர்.
சிறப்பு பயிலரங்கு ஏற்பாட்டினை சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஏற்பாடு செய்திருந்தார். அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கர்ராம் தொகுத்து வழங்கினார். கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கீதாவேணி மேலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினா வாழ்த்துரை வழங்கினார். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.சிறப்பு ஊர்திகள் மூலம் மாணவ மாணவிகள் மூலம் மீண்டும் பள்ளிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

naan thaanJun 21, 2025 - 11:12:42 AM | Posted IP 172.7*****