» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 8 பைக்குகள் மீட்பு

சனி 21, ஜூன் 2025 12:41:09 PM (IST)

நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் மீட்டுள்ளனர். 

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரபாகர்ராஜா (28), தென்காசி மாவட்டம், மாறாந்தையைச் சேர்ந்த சரவணன்(45) மற்றும் இசக்கிமுத்து(25) ஆகிய 3 பேர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள் மீட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட வாகனங்களில் மதுரை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து திருடப்பட்ட வாகனங்களும் உள்ளன. இதனை தொடர்ந்து குற்றவாளிகளை பாளையங்கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory