» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை : மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மேயர் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 11:43:23 AM (IST)

தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக தபால் தந்தி (P&T) காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வருகின்ற நீரின் அளவையும் மாநகரப் பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
மேலும் இந்த பகுதிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு சீரான குடிநீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ராமர் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய குற்றாலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழப்பு!
புதன் 30, ஜூலை 2025 5:36:49 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைப் பணிகள்: மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு
புதன் 30, ஜூலை 2025 4:53:00 PM (IST)

பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
புதன் 30, ஜூலை 2025 11:37:06 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு!
புதன் 30, ஜூலை 2025 10:42:39 AM (IST)

நெல்லையில் ஐ.டி. ஊழியர் ஆணவப்படுகொலை : போலீஸ் எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்
செவ்வாய் 29, ஜூலை 2025 4:19:00 PM (IST)

ஐ.டி. ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!
செவ்வாய் 29, ஜூலை 2025 12:45:50 PM (IST)

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINJul 6, 2025 - 03:06:30 PM | Posted IP 104.2*****