» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே 400 போதை மாத்திரைககள் பறிமுதல் : வாலிபர் கைது

செவ்வாய் 29, ஜூலை 2025 12:11:44 PM (IST)

நெல்லை அருகே போதை மாத்திரைககள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அம்பலம், மேற்கு தெருவை சேர்ந்த ஜோசப் (21) என்பவரை போலீசார் சோதனை செய்து பார்த்தனர். 

அப்போது அவர் மனித உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய 400 போதை மாத்திரைகளை திருப்பூரில் இருந்து வாங்கி நெல்லைக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜோசப்பை நேற்று கைது செய்து, அவரிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory