» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ஐ.டி. ஊழியர் ஆணவப்படுகொலை : போலீஸ் எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்

செவ்வாய் 29, ஜூலை 2025 4:19:00 PM (IST)

நெல்லையில் ஐ.டி. ஊழியர் ஆணவப்படுகொலை சம்பவத்தில் போலீஸ் எஸ்.ஐ. தம்பதியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்குமார் (26). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, சொந்த ஊருக்கு சென்ற கவின்குமார் நேற்றுமுன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். 

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கவின்குமாரை கொலை செய்த சுர்ஜித் போலீசில் சரண் அடைந்தார். சுர்ஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது அக்காளை கவின்குமார் காதலித்ததாகவும், காதலை கைவிடுமாறு கூறியதாகவும் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக கூறினார்.

இதையடுத்து சுர்ஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், கவின்குமார் காதலித்த இளம்பெண் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் (எஸ்.ஐ.) சரவணன், கிருஷ்ணகுமாரியின் மகள் என்பது தெரியவந்தது. போலீஸ் தம்பதியின் மகனான சுர்ஜித் தனது அக்காளை காதலித்த கவின்குமாரை கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் பூதாகாரமான நிலையில் கவின்குமாரின் உடலை வாங்க மறுத்து ஆறுமுகமங்கலம் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, இந்த கொலை தொடர்பாக எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது போலீசார் நேற்று வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், நெல்லையில் ஐ.டி.ஊழியர் கவின்குமார் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory