» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் தொடர்பாக அனைத்து துறைகளிலும் மேற்கொள்ள வேண்டியப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் , மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனித்தேரோட்ட திருவிழா வருகின்ற 08.07.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு உள்ளனர்.
அடிப்படை வசதியான கழிப்பிட வசதி, முதியோர்களை அழைத்து வருவதற்கு மின் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரத வீதியை சுற்றி தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் 5 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு 85 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்படவுள்ளனர். எனவே நெல்லையப்பர் கோவில் திருவிழா ஆனித்தேரோட்ட திருவிழாவை மிக சிறப்பாக நடைபெறுவதற்கு பொதுமக்கள், பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக தேரோட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் போக்குவரத்து மாற்றம் போன்ற பல்வேறு வசதிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நெல்லையப்பர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள அறங்காவலர் அறையில் நடைபெற்றது. ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், அறங்காவலர் குழுத்தலைவர் செல்லையா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)
