» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் கார் மீது கலவை இயந்திரம் மோதல்: ஒருவர் காயம்!

செவ்வாய் 8, ஜூலை 2025 11:15:42 AM (IST)



தூத்துக்குடியில் சரக்கு வாகனத்துடன் இணைக்கப்பட்ட கலவை இயந்திரம் கழண்டு கார் மீது மோதிய விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார். 

தூத்துக்குடியில், திருச்செந்தூர் ரோடு அன்னம்மாள் கல்லூரி அருகே கார் மீது சரக்கு வாகனத்துடன் இணைக்கப்பட்டிருந்த கலவை எந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்த நபர் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக காரில் இருந்த குழந்தைகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுபோல நிகழ்வுகள் தொடர் கதையாகவே நடந்து வருகிறது காலை 8 மணிக்கு பிறகு கனரக வாகனங்கள் நகருக்குள் அனுமதி கிடையாது. ஆனால் பள்ளி செல்லும் நேரத்தில் அதிகமான சரக்கு வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, தடை செய்யப்பட்ட நேரங்களில் சரக்கு வாகனங்கள் வருவதை கண்காணிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

SeenivasagamJul 9, 2025 - 12:32:57 AM | Posted IP 172.7*****

பணம் பத்தும் செய்யும்

அன்புJul 8, 2025 - 03:54:12 PM | Posted IP 104.2*****

பத்து ரூபா போலீஸ் கொடுத்தா ரயிலு ஏரோபிளேன் கூட நேரம் காலம் தேவை இல்லை தினமும் ஏராளமான சரக்கு வண்டிகள் பள்ளி செல்லும் பொழுது போய்க் கொண்டு தான் இருக்கிறது காவல்துறை ரொம்ப கேவலமா செயல்படுகிறது இந்த இன்று நடந்த விபத்துக்கு காரணமான அந்த குட்டியான டிரைவரை கொலை கேஸில் உள்ள வைக்கணும் வச்சி அத பெருசா விளம்பரப்படுத்தனும் படுத்திட்டா அடுத்து இந்த மாதிரி குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது அப்புறம் அந்த போலீஸ் பிட் போலீஸ உடனே டிஸ்மிஸ் பண்ணனும்

RajaJul 8, 2025 - 01:57:44 PM | Posted IP 162.1*****

போக்குவரத்து காவல் துறை எதுவுமே கண்டுகொள்வதில்லை என்ன செய்ய .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory