» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது : சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
திங்கள் 21, ஜூலை 2025 8:33:49 AM (IST)

குற்றாலத்தில் மலர் கண்காட்சியுடன் சாரல் திருவிழா தொடங்கியது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டிய நிலையில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள அருவிகளில் குளிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஆண்டுதோறும் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சாரல் திருவிழா மலர் கண்காட்சியுடன் நேற்று மாலை தொடங்கியது.
இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மலர் கண்காட்சியை பார்வையிட்டார். இந்த மலர் கண்காட்சியானது ஐந்தருவி தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவில் நடந்து வருகிறது. இதில் கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. கண்காட்சியில் தோட்டக்கலை துறை சார்பில் மலர்கள் மற்றும் செடி-கொடிகளால் அலங்கரிக்கப்பட யானை, ரெயில் பூச்சி, காய்கறிகளால் செய்யப்பட்ட குரங்கு உருவம், விதைகள், நறுமணப் பொருட்கள் மற்றும் தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சி போன்றவற்றை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு களித்தனர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் குடும்பத்தினருடன் பலர் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்றது.
இந்த விழாவையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். அவருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலை குமார், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் கலைஞர்களின் இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. இதனை திரளான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். சாரல் திருவிழா தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் நேற்று முன்தினம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று ஐந்தருவியில் நீர்வரத்து சீரானதால் அங்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் 2-வது நாளாக தடை நீடித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
