» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 22, ஜூலை 2025 11:12:06 AM (IST)

முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய /மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்ட தகுதியானவர்கள் இலவச தையல் இயந்திரம் பெற்றிட விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் படைவீரர் பிறப்பால் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். படைவிலகல் சான்றில் தையல் இயந்திரம் கோரும் பயனாளியின் பெயர் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மத்திய /மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் பெற்றவராக இருத்தல் கூடாது.  பயனாளியின் அதிகபட்ச வயது 40-க்குள்  இருக்க வேண்டும்.

முன்னாள் படைவீரரின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (0462-2901440) தொடர்பு கொண்டு விருப்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory