» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 இலட்சம் பரிசு : ஆட்சியர் அழைப்பு

வியாழன் 24, ஜூலை 2025 5:24:38 PM (IST)

திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 இலட்சம் மற்றும் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு "திரு.சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது" சிறப்பு பரிசாக ரூ.5 இலட்சம் மற்றும் ரூ.7000 மதிப்புள்ள பதக்கம் ஆகியவை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.

எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிரிடும் விவசாயிகள் இப்பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிர் விளைச்சல் போட்டியில் பங்குபெற தகுதிகள்: பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிரிடுபவராக இருக்க வேண்டும். தனியர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிர் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.

குத்தகைதாரர்களும் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட நெல் இரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் உரிய விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து பதிவுக் கட்டணம் ரூ.150ஃ- வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் செலுத்தி பதிவு செய்திட வேண்டும். பதிவு கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது.

விண்ணப்பத்துடன் நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்று ஆவணங்களான சிட்டா, அடங்கல் ஆகியவை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory