» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி அருகே கணவர் அடித்து கொலை: மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது

வெள்ளி 25, ஜூலை 2025 4:58:22 PM (IST)

திருநெல்வேலி அருகே கணவரை அடித்து கொலை செய்த மனைவி, மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, தளபதிசமுத்திரத்தைச் சேர்ந்த சுவிகரன் (50) என்பவர் குடிபோதையில் தனது மனைவி லதா(48), மகன் சுமன்(20) ஆகியோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டில் பிரச்சினை செய்த சுவிகரன் தனது மனைவி லதாவை தாக்கியுள்ளார். 

இதையடுத்து ஏற்பட்ட தகராறின்போது லதா, அவரது மகன் சுமன் மற்றும் லதாவின் உடன்பிறந்த சகோதரி சுபா(40) ஆகியோர் சேர்ந்து சுவிகரனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா தலைமையில், ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தில் குற்றவாளிகள் 3 பேரையும் விரைவாக கைது செய்ததற்கு, டி.எஸ்.பி. தர்ஷிகா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் மற்றும் காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory