» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் 30 சவரன் நகை திருட்டு: காவலர் உட்பட 2 பேர் கைது!

வெள்ளி 25, ஜூலை 2025 5:03:41 PM (IST)

நெல்லை மாநகர ஆயுதப்படை காவல் குடியிருப்பில் உள்ள வீட்டில் 30 சவரன் தங்க நகைகளை திருடிய வழக்கில் காவலர் உட்பட 2பேர் கைது செய்யப்பட்டுள்னர். 

திருநெல்வேலி, பெருமாள்புரம் ஆயுதப்படை காவல் குடியிருப்பிலுள்ள வீட்டில் கடந்த 16ம் தேதி முன்பக்க கதவினை திறந்து வீட்டில் இருந்த அலமாரியை உடைத்து அதிலிருந்த சுமார் 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முகமதுஅசாருதீன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடுபோன நகைகளை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory