» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் : வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு!!
வெள்ளி 25, ஜூலை 2025 5:11:55 PM (IST)

களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது- தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியாலும் அயராத உழைப்பினாலும் அனைத்து துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு தனிநபர் பொருளாதரத்தில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்காக அல்லும் பகலும் பாராமல் உழைத்து வருகிறார்கள். பல்வேறு துறைகளில் இன்று தமிழ்நாடு முதன்மை இடத்தில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி அப்பர் கோதையார் பகுதிகளை உள்ளடக்கிய களக்காடு வனச்சரகப் பகுதியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.மேலும் இப்பகுதி விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை தடுப்பதற்கு காட்டு பன்றிகளை சுட்டு பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக வனத்துறை அலுவலகத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்கப்படும். மேலும் வனத்துறையினரால் குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டு யானை வருவதை தடுப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் வனப்பகுதி 21.76 சதவீதமாக உள்ளதை உயர்த்தி வருகிறோம். இன்னும் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் வனப்பகுதி 33 சதவீதமாக உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் வனக்கல்லூரி தற்போது கோயம்புத்தூர் பகுதியில் உள்ளது. தென்பகுதியில் வனக்கல்லூரி அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தென் பகுதியிலும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பல்லூயிர் வன உயிரின புங்கா 1500 ஏக்கர் பரப்பளில் ஆசியாவிலையே பெரியதாக சென்னை வண்டலூரில் உள்ளது. பல்லூயிர் வன உயிரின புங்கா வேலூரிலும் அமைந்துள்ளது.
தென் தமிழக மக்களுக்காக திருச்சிராப்பள்ளியில் பல்லூயிர் வன உயிரின புங்கா 420 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையில் 10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற வேட்டைதடுப்பு காவலர்களை நிலையானை பணியாளர்களாக ஆக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க வனத்துறையில் காலியாக உள்ள பிற பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வனவிலங்குகள் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பெரும்பாலான இடங்களில் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கூட கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி அருகே யானைகள் முகாமிட்டுள்ளது, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் மூலம் அனுப்பும் பணி நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வன விலங்குகளால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக, களக்காடு வனச்சரக துணை இயக்குனர் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஊழியர்களுடன் வனப்பகுதியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது முன்னாள் சட்டபேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், களக்காடு சரணாலயம் துணை இயக்குநர் ராமேஸ்வரன், களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஸ், துணை தலைவர் பி.சி.ராஜன், களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகரன், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் யோககேஸ்வரன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
