» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தைகளுக்க்கான இருதய நோய்கள் கண்டறியும் முகாம் : ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்

வெள்ளி 25, ஜூலை 2025 5:43:59 PM (IST)



திருநெல்வேலியில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு மற்றும் இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (25.07.2025) அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையும் இணைந்து 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு மற்றும் இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில்: திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் சார்பாக பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு பிறவி இதய குறைபாடு மற்றும் இதய சம்பந்தமான குறைபாடுகளுக்கான இதய நோய் கண்டறிதல் முகாம் இன்று நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 120 குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை செய்யப்பட்டது. திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இதயவியல் பகுதியோடு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களோடு இணைந்து இந்த முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நோய் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு தேவையான அறுவை சிகிச்சை முதல்வர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் செய்யப்படும். இரண்டு வருடங்களில் தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம் மூலமாக 151 குழந்தைகளுக்கு இருதய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதில் 31 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இருதய குறைபாட்டை நீக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அதிகமான நவீன சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, துணை இயக்குநர் சுகாதரப்பணிகள் வேல்முருகன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மருத்துவர்கள் சுப்பையாஸ்ரீராம், சுந்தர்ராஜன், இந்துலேகா, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory