» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காரையாறு பகுதிகளை வனத்துறை அமைச்சர் ஆய்வு : சொரிமுத்து அய்யனார் கோவிலில் தரிசனம்!

சனி 26, ஜூலை 2025 5:18:21 PM (IST)



காரையாறு வனப்பகுதி மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளை  வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்  இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து நேற்றையதினம்  பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்றையதினம், காரையாறு, சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து வெளியேற்றம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, நீர்வரத்து சேமிப்பது, விவசாய பாசனத்திற்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.   

மேலும், காரையார் - மணிமுத்தாறு அணையை இணைப்பு குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர்  மற்றும் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார். தொடர்ந்து காரையாறு பகுதிகளில் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு  சென்று ஆய்வு மேற்கொண்டு, சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.  ஆய்வில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மு.இளையராஜா, முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory