» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விதைப்பந்து தயாரிப்பு: வனங்களை உருவாக்குவது குறித்த பயிற்சி முகாம்
சனி 26, ஜூலை 2025 9:16:28 PM (IST)

பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்துகள் தயாரித்து வீசி, வனங்களை உருவாக்குவது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
"ஒரு கோடி விதைப்பந்துகள்" உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சமூக நல ஆர்வலர் வெங்கடம்பட்டி பூ. திருமாறன் சிறப்புரையாற்ற சைகை மொழி பெயர்ப்பாளர் சுபா தமது சைகை மொழி மூலம் மாணவ மாணவியருக்கு புரிய வைத்தார்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜே. ஜான்சி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஆர்.கே.ஜேக்கப், ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துசாமி முன்னிலை வகித்தனர். ஹெலன் ஜாலினா வரவேற்றார். பசுமைப்படை பொறுப்பு ஆசிரியை பாலின் ஜோன்ஸ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விதைப்பந்துகளை மாணவ மாணவியர் எப்படி செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், அதற்கான அவசியம் என்ன என்பதனை திருமாறன் விளக்கினார். ஹரி பிரியாணி அதிபர் ஹரிஹர செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கினார். "வரம் ஜவகர்" நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் மழை வளம் அதிகரிக்க மரங்களை பெறுவாரியாக வளர்க்க பள்ளிகள், கல்லூரிகளை மாவட்ட ஆட்சியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என திருமாறன் வேண்டுகோள் வைத்தார். விதைப்பந்து விஷயத்தில் நன்கு செயல்படும் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு "சூப்பர் மாணவர் விருது" வழங்கப்பட உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
