» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்த பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கல்!

திங்கள் 28, ஜூலை 2025 12:32:36 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளித்த பயனாளிகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.07.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணி சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் (CSPs) மூலம் முன்களப் பணியாளர்களால் மேற்கொள்வதற்காக தலா ரூ.17 ஆயிரம் மதிப்பில் 180 களப்பணியாளர்களுக்கு கையடக்க கணினிகளை மாவட்ட வழங்கினார்.

அவர் தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ள 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5018/- மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.1.05 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர நாற்காலி ஒரு பயனாளிக்கு, ரூ.6500/- மதிப்பிலான மூன்று சக்கர நாற்காலி ஒரு பயனாளிக்கும் வழங்கினார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory