» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்னகத்தின் பிரம்மாண்ட பள்ளியில் விதைப்பந்துகள் விழிப்புணர்வு கூட்டம்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 9:00:49 AM (IST)

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு விதைப்பந்துகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கல்வி நிலையங்களின் தாளாளர் எம். திவாகரன் தலைமை தாங்கி பேசினார். சமூக நல ஆர்வலரும், 1 கோடி விதைப்பந்துகளை பூமி பந்துக்கு அர்ப்பணிக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள வெங்காடம்பட்டி டிரஸ்ட் பூ. திருமாறன் மாணவ மாணவிகள் இடையே சிறப்புரை ஆற்றினார். பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதல்வர் சுடலையாண்டி பிள்ளை, சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் பால பெஞ்சமின், சகாயத்தாய் பெண்கள் கல்லூரி முதல்வர் சாந்தி, செயற்குழு உறுப்பினர் பிந்து, நெல்லை வரம் ஜவகர் பேசினர்.
சுமார் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயிலும் எஸ். ஏ. வி பாலகிருஷ்ணா அரங்கம் அரசியல் மாநாடு போல் காட்சியளித்தது. சமூக அக்கறை கொண்ட கல்வியாளர் திவாகரன் மிகுந்த ஆர்வத்துடன் வடக்கன்குளம் பகுதி வாழ் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் விதைப்பந்து நிகழ்ச்சியை நடத்தினார். விதை பந்துகள் செய்து, ஆங்காங்கே வீசி, மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, மழையை சீராக வரவழைக்கும் யுக்தியை திருமாறன் கூடியிருந்த மாணவ சமுதாயத்திற்கு விளக்கினார். விதைப்பந்து தயாரிப்பு முறைகளை இந்த மாபெரும் கூட்டம் மூலம் திருமாறன் புரிய வைத்தார்.
விதைப்பந்துகள் உருவாக்குதலை ஒரு சாதனை நிகழ்வாக செய்திட பள்ளி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதில் பங்கேற்க போகும் அனைவருக்கும் ஹரி பிரியாணி ஹரிஹர செல்வன் சான்றிதழ்கள் வழங்குகிறார். நிகழ்ச்சியினை கிருஷ்ண பிரியா, ஞான சோபியா தொகுத்து வழங்கினர். விசாலமான வகுப்பறைகள், விசாலமான பள்ளி வளாகத்தில் பயிலும் குழந்தைகளின் மனமும் விசாலமாக அமையும் என சமூக நல ஆர்வலர் பூ. திருமாறன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




