» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராதாபுரம் குளத்தை சேதப்படுத்தி நிழற்குடை அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

திங்கள் 4, ஆகஸ்ட் 2025 12:26:02 PM (IST)



ராதாபுரம் குளத்தை சேதப்படுத்தி நிழற்குடை அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றது. இந்நிலையில் ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் குளத்து கரையில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்து வருகின்றனர் குளத்து கரையில் பேருந்து நிலையம் அமைந்தால் மிகவும் ஆபத்தான நிலை ஏற்படும்.

விவசாயிகள் அந்த வழியாகத்தான் தங்களது விலை பொருட்களை கொண்டு சென்று வரும் பாதையாகும். மழைக்காலங்களில் நீர் அதிகரித்து தண்ணீர் வெளியே செல்லும் முக்கிய இடமாக உள்ளதால் பேருந்து நிலையம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரில் தற்போது நடைபெறும் பணியினை தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory