» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா ஆக.16ல் தொடக்கம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:57:03 PM (IST)

நெல்லை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா ஆக.16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில், கலை பண்பாட்டுத் துறை சார்பில் நெல்லை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டும், நாட்டுப்புறக் கலை வடிவங்களை பாதுகாத்திடும் பொருட்டும், உலகமெங்கும் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலை வடிவங்களை அறியச் செய்திடும் வகையில் சென்னை மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் 7 மண்டலங்களுக்கு உட்பட்ட காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 8 முக்கிய நகரங்களில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இவ்வாண்டு மேற்காணும் இடங்களில் இக்கலைத் திருவிழா நடத்தப்படவுள்ளது. நெல்லை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா திருநெல்வேலி, வ.உ.சிதம்பரனார் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் 16.08.2025 மற்றும் 17.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவில் திருநெல்வேலி மண்டலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான கொம்பு தப்பு, நையாண்டிமேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, தேவராட்டம், மாடாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், தெம்மாங்கு பாடல், வில்லிசை, களியலாட்டம் மற்றும் தோல்பாவைக்கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகளும், பிற மாவட்டங்களின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான ஜிம்ளாமேளம், தெருக்கூத்து, ஜிக்காட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், உறுமி மேளம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்படவுள்ளன. மேற்காண் விழாவினை அமைச்சர், சட்டப் பேரவை மன்றத் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், உதவி காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




