» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கங்கைகொண்டானில் பயோ எனர்ஜி எல்எல்பி நிறுவனம் : முதல்வர் துவக்கி வைத்தார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

கங்கைகொண்டான் தொழிற்சாலை வளாகத்தில் நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி நிறுவனத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.8.2025) தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கி வைத்து திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி. நிறுவனத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கங்கைகொண்டான் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி. நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார்.
2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுடன் நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி நிறுவனமானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் அவர்களால் இன்று காணொலி காட்சி வாயிலாக இந்நிறுவனம் திறந்துவைக்கப்பட்டது. மேலும், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மெசர்ஸ். பிரிட்டானியா இண்டஸ்டிரீஸ் லிமிடெட்., மெசர்ஸ். ஏடிசி டயர்ஸ் பிரைவேட் லிமிடெட்., மெசர்ஸ். நோவா கார்பன் இந்தியா பிரைவேட் லிமிடெட்., ஆகிய நிறுவனங்களின் விரிவாக்க பணியினையும் தொடங்கி வைத்தார்கள்.
மேலும், நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி நிறுவனமானது 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. தென் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காற்றும். இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெற உள்ளனர்.
இந்நிறுவனத்தின் மூலம் பயோஎனர்ஜி மற்றும் தொடர்புடைய தொழில்கள் வளர்ச்சி பெறவும். போக்குவரத்து மற்றும் அதன் சேவைகள் தேவையை அதிகரித்து பிராந்திய அடித்தள வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், தேசிய பயோ எரிபொருள் கொள்கைக்கு துணை நிற்கிறது. இந்த திட்டம் ஆற்றல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வலிமைக்கு ஏற்றதாக செயல்படும்.
இந்நிகழ்ச்சியில், நிறுவன தலைவர் வி.எஸ்.நடராஜன், சுந்தரி நடராஜன், திட்ட ஆலோசகர் மணிவேல், மேலாண்மை இயக்குநர் வசந்தாதேவி, துணை மேலாளர் சங்கரன், கங்கைகொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பிரபாகரன், இளநிலை பொறியாளர் முருகன் உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
K. SermakaniAug 20, 2025 - 07:34:47 PM | Posted IP 172.7*****
இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் தூர்நாற்றதால் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பிற்கு தூயாஉள்ளாகிறார்கள்
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)





K. SermakaniAug 20, 2025 - 08:03:40 PM | Posted IP 104.2*****