» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாலைகள் - குடிநீர் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் : ஊராட்சி குழுத் தலைவர் தகவல்
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 5:41:25 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிகளில் சாலைகள் மற்றும் குடிநீர் மேம்பாட்டிற்கான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இன்று (05.08.2025) மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி நிதி ரூ.5.30 கோடி நிதியினை ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பணிகளுக்கு ஒவ்வொரு ஊராட்சி உறுப்பினர்களுக்கும் ஒதுக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வார்டுக்கு ரூ.60 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கூடுதலாகவும் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளார்கள். அது குறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும். இதே போல் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ. 30 இலட்சத்துக்கு குறையாமல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை குடிநீர் மற்றும் பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு செல்லும் சாலையை சீரமைக்கவும், பூங்காவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை முடிந்தவரை வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ள 2 முத்தான திட்டங்களான உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய திட்டங்களை வார்டு வாரியாக செயல்படுத்தி மக்கள் பயனடைவதற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் செல்வலெட்சுமி, மாவட்ட ஊராட்சி செயலர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பாஸ்கர், சாந்தி, மகேஷ் குமார், கனகராஜ், சாலமன் டேவிட், அருந்தவசு, ஜான்சி ரூபா, கிருஷ்ணவேணி, சத்தியவாணி முத்து, தனித்தங்கம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




