» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 19678 மனுக்கள் பெறப்பட்டுள்ளது: ஆட்சியர் சுகுமார் தகவல்

புதன் 6, ஆகஸ்ட் 2025 4:41:58 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கடந்த 5ஆம் தேதி வரை 19678 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார். 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஒன்றியம், சிவந்திப்பட்டி சமுதாய நலக்கூடம், மனக்காவலம் பிள்ளைநகர் சத்யா மஹால், திருக்குறுங்குடி பேரூராட்சி சரஸ்வதி திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் இன்று (06.08.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்தரப்பு மக்களும் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென பல்வேறு சீர்மிகு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் வசதிக்கேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கை மனுக்களையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான பொதுமக்களிடையே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் சேவைகள் கிடைப்பதற்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் 255 முகாம்கள் நடத்திடுவதற்கு திட்டமிடப்பட்டு அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 07.10.2025 வரை இம்முகாம்கள் நடைபெறவுள்ளது.

இன்றையதினம் பாளையங்கோட்டை ஒன்றியம், சிவந்திப்பட்டி சமுதாய நலக்கூடம், மனக்காவலம் பிள்ளைநகர் சத்யா மஹாலிலும், திருக்குறுங்குடி பேரூராட்சி சரஸ்வதி திருமண மண்டபத்திலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பசுகிடைவிளை காமராஜ் திருமண மண்டபத்திலும், பாப்பாக்குடி ஒன்றியம் கிராமங்கலம் சமுதாய நலக்கூடத்திலும், இராதாபுரம் ஒன்றியம் உதயத்தூர் வி.பி.ஆர்.சி மையத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் உடனடியாக தீர்வு காணும் வகையில் குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம் செய்தல், பெயர் சேர்த்தல், மின்விநியோகம் பெயர் மாற்றம் போன்ற உடனடியாக தீர்வு காணும் மனுக்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே தீர்வு வழங்கப்பட்டு பலர் சேவைகள் பெற்று வருகின்றனர். மேலும், முகாமில் தீர்வு கிடைக்காத மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

கடந்த 15.07.2025 முதல் 05.08.2025 வரை நடைபெற்ற 65 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 19678 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை (07.08.2025) திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் என்.எஸ்.கே. திருமண மண்டபத்திலும், களக்காடு நகராட்சி கீழகருவேலன்குளம் இராஜம் திருமண மண்டபத்திலும், திசையன்விளை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்திலும், மானூர் ஒன்றியம் தாழையூத்து என்.ஏ.பி.மஹாலிலும், நாங்குநேரி ஒன்றியம் வடக்கு இலங்குளம் விபிஎஸ்சி கட்டிடத்திலும், வள்ளியூர் ஒன்றியம் ஆவரைக்குளம் எஸ்.பி.எஸ்.திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory