» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து

புதன் 6, ஆகஸ்ட் 2025 5:17:05 PM (IST)

புனலூர்- செங்கோட்டை இடையே குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கேரள மாநிலம், குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புனலூர்- செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பகுதி என்பதால் இரட்டை இன்ஜின்களை பொருத்துவதற்கான பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது ரயில் இன்ஜினில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீ அணைப்பான்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory