» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் 23ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:20:21 PM (IST)
திருநெல்வேலி புனித யோவான் கல்லூரியில் வருகிற 23ஆம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.08.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை புனித யோவான் கல்லூரி (St. John’s College) பாளையங்கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம் (Resume), கல்விச்சான்று, ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 09.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார்துறை நிறுவனங்களும் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel –இல் இணைந்து பயன்பெறலாம்.
இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு இரத்து செய்யப்படமாட்டாது எனவும் வேலைநாடுநர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:02:33 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:52:50 AM (IST)

கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 3:48:06 PM (IST)

தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனை : ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்!
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 12:14:37 PM (IST)

மின் ஊழியரை தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 11:22:29 AM (IST)

பள்ளி மாணவர் உடலை பெற்றுக்கொள்ள மறுப்பு: நீதிமன்ற உத்தரவின்பேரில் தகனம்!
புதன் 6, ஆகஸ்ட் 2025 8:40:26 PM (IST)
