» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:02:33 PM (IST)

திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம், சுடலை கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ஆறுமுககனி (20) என்பவர் ஈடுபட்டு வந்தார்.

அவர் மீது திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், ஜங்ஷன் சரகம் காவல் உதவி கமிஷனர் (பொறுப்பு) நிக்சன், திருநெல்வேலி சந்திப்பு (குற்றம்) போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரப்படி நேற்று (7.8.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory