» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை மாணவர்கள் பார்க்க வேண்டும் : முத்தாலங்குறிச்சி காமராசு

சனி 9, ஆகஸ்ட் 2025 12:26:01 PM (IST)



ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை தமிழ் மாணவர்கள் ஒவ்வொருவரும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தன்னாட்சி கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடந்த தமிழ் மன்ற கருத்தரங்கம் இலயோலா அரங்கத்தில் நடந்தது. இணை முதல்வர் அ .லூர்து சாமி தலைமை வகித்தார். தமிழ்மன்றப் பொறுப்பாசிரியர் ஜெனிபா மேரி, துறை ஒருங்கிணைப்பாளர் மா. பாலசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு "தமிழர் வரலாற்றில் ஆதிச்சநல்லூர்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி பேசும்போது ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியத்தினை தமிழ் மாணவர்கள் ஒவ்வொருவரும் நேரில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் கல்லூரியை சுற்றியே பல அபூர்வ தகவல்கள் கல்வெட்டுகளாக புதைந்து கிடக்கிறது. 

குறிப்பாக பாளையங்கோட்டை பஸ் நிலையத்தினை சுற்றி பல கல்வெட்டுகள் உள்ளன. அதையெல்லாம் தாங்கள் படித்து பார்த்தால் நடந்த பல வரலாறுகள் நமக்கு புலப்படும் என பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து மாணவி சி.த.இஷா தொகுத்து வழங்கினார், மாணவி சபிகா வரவேற்றார். மாணவி ஜீவன்ஸ்ரீ நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory