» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நீர்நிலைகளில் மண் அள்ள முழுமையாக தடை விதிக்க வேண்டும்: சமூக ஆர்வலர் கோரிக்கை!
சனி 9, ஆகஸ்ட் 2025 12:44:21 PM (IST)

பாளையங்கோட்டை வட்டத்தில் நீர்நிலைகளில் முறைகேடாக மணல் திருடி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பேச்சித்துரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டிலுள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் / களி மண் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக மண் எடுத்து செல்ல அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.
பாளையங்கோட்டை வட்டத்தில் விவசாயத்திற்கு இலவசமாக மண் எடுத்து செல்லும் இந்த ஆணையை பயன்படுத்தி மணல் மாஃபியாக்கல் விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்று பல்வேறு நீர்நிலைகளில் முறைகேடாக மண் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். வண்டல் மண் / களி மண் அள்ள அனுமதி பெற்று செம்மண் அள்ளி வீட்டு மனைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை வட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள நொச்சிகுளம், வேட்டைக்காரன் குளம், சிவலார்குளம், பற்பகுளம், வேம்பகுளம் மற்றும் வேப்பனாங்குளம் போன்ற பல்வேறு நீர்நிலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்று செம்மண் அள்ளி மனைகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
மேலும் அரசு விதித்த பெரும்பாலான நிபந்தனைகளை கடைபிடிக்கப்படவில்லை. மேலும் நீர்நிலைகளில் மண்ணை அதிக அளவு திருடி வெளிய விற்று வருவதால் குடியிருப்பு பகுதியில் நிலத்தடிநீர் மட்டமானது வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை வட்டத்தில் பல்வேறு நீர்நிலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்காமல் வியாபார நோக்கில் மண்ணை திருடி விற்பனை செய்த நபர்கள் மீது தனி விசாரணை குழு மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் மண் அள்ள முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)


