» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்மண்டல சாரண சாரணிய இயக்க பெருந்திரளணி சாம்பவர் வடகரை அரசு பள்ளி முதலிடம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:11:20 PM (IST)

தென்மண்டல சாரண சாரணிய இயக்க பெருந்திரளணியில் தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர்கள் முதலிடம் பிடித்தனர்.
சாரண சாரணிய இயக்கம் தென்மண்டல பெருந்திரளணி திருநெல்வேலி மாவட்டம் மருதக்குளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் 21.08.2025 முதல் 23.08.2025 வரை நடைபெற்றது. இதில் 39 கல்வி மாவட்டத்தில் 700 சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர்கள், தலைமை ஆசிரியர் பா.பிரபாவதி வழிகாட்டுதலின்படி கூடாரம் அமைத்தல் போட்டியில் முதலிடமும் colour party இரண்டாம் இடமும் பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்துள்ளார்கள்.
பெருந்திரளணியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கேடயம் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. சிவக்குமார் அய்யா அவர்களிடம் பெறும் நிகழ்வுகள். சாரண ஆசிரியர் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர் சி.நடராஜன் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச் செய்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பா. பிராபாவதி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)




