» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாய் சரவணன் வழிகாட்டுதலின் பேரில், தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் தலைமையில் தென்காசி முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான ஏ. பிஸ்மிதா முன்னிலையில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.முருகவேல், தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நிதிபதி ஜெ. ராஜேஷ்குமார், தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எஸ் முத்துலெட்சுமி குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ் முத்துலட்சுமி, தென்காசி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே என். குரு, ஓய்வு பெற்றநீதிபதிகள் எஸ் தங்கக்கனி, பி. முருகையா மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 4 கோடி 45 லட்சத்து 25 ஆயிரத்து 681 ரூபாய் மதிப்புள்ள 241 வழக்குகளும், நீதி மன்றத்திற்கு முன் வரும் வங்கி வழக்கு 53,70,816 ரூபாய் மதிப்புள்ள 114 வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது. சங்கரன்கோவில் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 37,11,100 ரூபாய் மதிப்புள்ள 681 வழக்குகளும். நீதிமன்றத்திற்கு முன்வரும் வங்கி வழக்கு 24,80,741 மதிப்புள்ள 46 வழக்குகளும் சமரசமாக முடிக்கப்பெற்றது.
ஆலங்குளம் மக்கள் நிதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 48,58,150 ரூபாய் மதிப்புள்ள 27| வழக்குகள் சமரசமாக முடிக்கப்பெற்றது. சிவகிரி மக்கள் நீதிமன்றத்தில் 5,42,700 ரூபாய் மதிப்புள்ள 126 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 6,09 ,700 ரூபாய் மதிப்புள்ள 152 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)


