» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு அலுவலகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் : அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:44:21 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (19.09.2025) தூய்மை இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல முன்னெடுப்புகளில் தற்போது கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை சேகரித்து அகற்றும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அலுவலகத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் பொருட்கள் சரியான முறையில் வைத்துக்கொள்வதற்கும் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதற்காக அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா பார்வையிட்டார்கள். இப்பணியின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)

