» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு துவக்கம்!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:07:41 PM (IST)
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி (ரயில் எண். 06151/06152):-
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண். 06151) செப்டம்பர் 22, 29, அக்டோபர் 06, 13, 20, 2025 (திங்கட்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கன்னியாகுமரி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (06152) செப்டம்பர் 23, 30, அக்டோபர் 07, 14, 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
திருநெல்வேலி – செங்கல்பட்டு (ரயில் எண். 06154/06153):-
அதேபோல், திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06154) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 26, 28, அக்டோபர் 03, 05, 10, 12, 17, 19, 24, 26 (வெள்ளிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கல்பட்டு – திருநெல்வேலி இடையே வாரம் இருமுறை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06153) இயக்கப்படுகிறது. இந்த ரயில் செப்டம்பர் 26, 28, 3, அக்டோபர் 5, 10, 12, 17, 19, 24, 26 (வெள்ளிக்கிழமை) & (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு அன்று இரவு ௧11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (20-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)

