» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவில் நிலப்பிரச்சினையில் வாலிபர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வியாழன் 25, செப்டம்பர் 2025 8:28:13 AM (IST)

மானூர் அருகே கோவில் நிலப்பிரச்சினையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

கடந்த 2014-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே ரஸ்தா பகுதியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே, கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், ரஸ்தாவைச் சேர்ந்த பெருமாள்சாமி (29) கொலை செய்யப்பட்ட வழக்கில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ராபின்சன்ஜார்ஜ் தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான ராஜாபாபு(35), முருகன்(50) ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் மானூர் காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் (தற்போது மதுரை மாநகரம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் சூரசங்கரவேல் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 20 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 66 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 21 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory