» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை உடையார்பட்டி குளம் தூர்வாரும் பணி: ஆட்சியர் துவக்கி வைத்தார்.
வியாழன் 25, செப்டம்பர் 2025 8:38:07 AM (IST)

நெல்லை உடையார்பட்டி குளத்தினை அமலைசெடிகளை அகற்றி தூர்வாரி, நடைபாதை அமைக்கும் பணியை ஆட்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் தனியார் துறை பங்களிப்புடன் பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதில் பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய், தாமிரபரணி ஆறு உள்பட பல இடங்களை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில் உடையார்பட்டி குளத்தினை அமலைசெடிகளை அகற்றி தூர்வாரி, நடைபாதை அமைக்கும் பணியை போஸ் நிறுவனத்தில் நிதி உதவியுடன் எஸ்னரோ நிறுவனத்தின் மேற்பார்வையில் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் துவக்கவிழா உடையார்பட்டி குளத்துக்கு கரையில் வைத்து நடந்தது. மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமை வகித்து கொடியசைத்து இந்த பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எக்ஸ்னரோ பவுன்டேசன் தலைவர் செந்தூர் பாரி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, திட்ட அலுவலர் சரவணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோவிந்த ராஜ், பாஸ் பிளான்ட் பஞ்சு அருணாசலம் உள்பட பலர் பேசினர். முன்னதாக முத்து ராம் தியேட்டர் முன்பு இருந்து பிளாஸ்டிக்கு ஒழிப்பு மாணவர்கள் நடத்திய பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.சுகுமார் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, லயன்ஸ் கிளப் திருநெல்«வி கிரின் சிட்டி பொன் திருமலை முருகன் 12 வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ், எஸ்னரோ நிறுவனத்தினை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாசன், சி.எஸ்.ஆர் ஆலோசகர் இராதா சீனிவாசன், மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன், திட்ட ஒருங்கிணைப்பாளர் நிசாந்து, செந்தில் குமார், ம.தி.தா இந்து கல்லூரி தமிழ் துணை பேராசிரியர் இலக்குவன், கிராம உதயம் துணை இயக்குனர் புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)




