» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உதவி டிராக்டர் ஆபரேட்டர் பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 25, செப்டம்பர் 2025 3:41:08 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் உதவி டிராக்டர் ஆபரேட்டர் இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் 2025-26 அறிவிப்பு எண்.46-ன்படி கிராமப்புற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Assistant Tractor Operator இரண்டாம் கட்ட பயிற்சி உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனை, திருநெல்வேலி அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
மேற்காணும் Assistant Tractor Operator பயிற்சி வகுப்பு 15 முதல் 30 நபர்களுக்கு 27 நாட்கள் நடத்தப்படும். இப்பயிற்சியில் டிராக்டர் இயந்திரங்களை விவசாய இணைப்புக் கருவிகளுடன் இயக்கிடவும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு, டிராக்டர் இன்ஜின் செயல்பாடு, பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 2025-26ஆம் நிதி ஆண்டில் 2ம்கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . Assistant Tractor Operator பயிற்சி 26.09.2025 அன்று பயிற்சி துவங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லை மற்றும் வயது வரம்பு 18 முதல் 35 வயது ஆகும். மேற்படி, பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் சமீபத்திய புகைப்படம் -ஆகியவற்றை உதவி செயற் பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனை, எண்.1, டிராக்டர் வீதி, என்.ஜி.ஓ காலனி, திருநெல்வேலி அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது https://candidate.tnskill.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ தங்கள் பெயரினை பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இப்பயிற்சி வகுப்பு முடிந்ததும் தகுதிவாய்ந்த பயிற்சியாளருக்கு டிராக்டர் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தர ஆவன செய்யப்படும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு 0462-2900766, 99409 26195 மற்றும் 88386 00112 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவர் கைது
வியாழன் 8, ஜனவரி 2026 7:59:54 AM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

