» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை: வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை

சனி 27, செப்டம்பர் 2025 8:45:10 AM (IST)

ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முகமது ஆசிப் (25). இவருக்கு ஆன்லைன் செயலி மூலம் சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அறிமுகம் ஆனார். அப்போது நட்பின்பேரில் இளம்பெண் தனிப்பட்ட பதிவுகளை பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் இளம்பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 2024-ம் ஆண்டு அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிப்பை கைது செய்தனர்.

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை முடித்து சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை முறையாக ஆஜர் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து மாஜிஸ்திரேட்டு ராம்குமார் தீர்ப்பு வழங்கினார்.

அதில் முகமது ஆசிப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 டி-யின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், பிரிவு 354 டி-யின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory