» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் மருத்துவ பரிசோதனை பெற்று பயனடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” மற்றும் இடைகால் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிலும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் ” திட்டத்தினை கடந்த 02.08.2025 அன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு திசையன்விளையிலும், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு கல்லிடைக்குறிச்சியிலும், களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு களக்காடிலும், பாளையங்கோட்டை மண்டலத்திற்கு தூய யோவான் மேல்நிலைப்பள்ளியிலும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வள்ளியூரிலும், அம்பாசமுத்திரம் வட்டம் விக்கிரமசிங்கபுரத்திலும், மானூர் வட்டம் தேவர்குளம் என இதுவரை நடைபெற்ற 7 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்களில் 19,879 நபர்கள் கலந்து கொண்டு உடல்பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 808 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பரிசோதனைகளில் 114 நபர்களுக்கு தீவிர நோய்கள் கண்டறியப்பட்டு உயர்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உயர்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்முகாமில் அடிப்படை சிகிச்சை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் பரிசோதனைகளும் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் முழுமையான இரத்தப்பரிசோதனை, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல் பரிசோதனைகளும், ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற அனைத்து பரிசோதனைகளும் கண்டறியப்படும்) மேலும் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இதயவியல், மகப்பேறு மருத்துவம் எலும்பு மற்றும் நரம்பியல், மனநலம், நுரையீரல், தோல் நோய், காது மூக்கு தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் இயன்முறை சிகிச்சை போன்ற 17 வகையான சிறப்பு மருத்துவம் மற்றும் 36 மருத்துவர்களில் 28 சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்படுவதோடு, 303 சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மேற்கண்ட பரிசோதனைகள் மட்டுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத்திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் போன்ற சேவைகளும் இம்முகாமில் வழங்கப்படுகிறது.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரமும் ”சரியாக உண்ணுங்கள்” இயக்கம் மூலம் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொண்டு அனைத்து சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அறிவுரைகள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இன்று நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 2,359 நபர்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனை பெற்று பயனடைந்தனர். முன்னதாக, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம், இடைகால் பகுதிகளுக்கு இடைகால் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். இதுவரை 219 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 44,787 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, 28,669 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 11,984 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 4,134 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசின் விருது பெற்ற வீரவநல்லூர் பாய் நெசவாளர் பெண்களுக்கு பாராட்டு விழா
சனி 22, நவம்பர் 2025 3:36:59 PM (IST)

தென்காசி அருகே லாரி மோதி 9 மாடுகள் பலி: 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம்!
சனி 22, நவம்பர் 2025 12:46:58 PM (IST)

அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு!
சனி 22, நவம்பர் 2025 10:08:40 AM (IST)

பற்களை பிடுங்கியதாக வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
சனி 22, நவம்பர் 2025 8:49:41 AM (IST)

இராதாபுரம் வட்டத்தில் ரூ.18.95 கோடியில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:41:13 PM (IST)

விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் : சபாநாயகர் அப்பாவு பேட்டி!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:00:56 PM (IST)




