» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில், தி.மு.க. பெண் சேர்மன் மீது, தி.மு.க.வினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் தோல்வியடைந்தது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய செயலராக தி.மு.க.வை சேர்ந்த சவுமியா உள்ளார். இவரது கணவர் ஆரோக்கிய எட்வின் கவுன்சிலராக இருப்பதோடு, தி.மு.க. ஒன்றிய செயலராகவும் உள்ளார். இருவரும் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டில், தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், தி.மு.க. - 6, அ.தி.மு.க. - 3, சுயேச்சை - 2, அ.ம.மு.க - 1 என, மொத்தம் 12 பேர் சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. சேரன்மகாதேவி சப் -கலெக்டர் ஆயுஷ் குப்தா, பி.டி.ஓ. யமுனா ஆகியோர் தலைமையில் நடந்த ஓட்டெடுப்பில், 12 பேர் மட்டும் பங்கேற்றனர்.
சேர்மன் சவுமியா, அவரது கணவர் ஆரோக்கிய எட்வின், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இருவர் என, நால்வர் பங்கேற்கவில்லை. தி.மு.க.வினர் 6 பேர் எதிராக ஓட்டளிக்க தயாராக இருந்த போதிலும், 5ல் 4 பங்கு அதாவது, 13 பேர் வராததால், ஒரே ஒரு ஓட்டு குறைவால் தீர்மானம் நிறைவேறவில்லை. அ.தி.மு.க.வினர் தயவால், தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 2, அக்டோபர் 2025 12:23:25 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
புதன் 1, அக்டோபர் 2025 8:44:07 AM (IST)

காந்தி ஜெயந்தி: அக்.2ம் தேதி மது விற்பனைக்கு தடை - ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:42:09 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)

கரூர் சம்பவம் எதிரொலியாக வழக்குப்பதிவு: புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு!
ஞாயிறு 28, செப்டம்பர் 2025 7:16:38 PM (IST)
