» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசம்: வனத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை!

சனி 4, அக்டோபர் 2025 10:35:49 AM (IST)

விக்கிரமசிங்கபுரத்தில் கோவிலுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடிகளை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களான அனவன்குடியிருப்பு, பசுக்கிடைவிளை, பொதிகையடி, மேட்டு தங்கம்மன் கோவில் தெரு உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் நிலவி வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் விக்கிரமசிங்கபுரம் மேட்டு தங்கம்மன் கோவில் தெருவில் ரேஷன் கடை அருகே உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் 3 கரடிகள் புகுந்தன. அவைகள், கோவிலில் இருந்த பூஜை பொருட்களை சேதப்படுத்தின. மேலும் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக வைத்திருந்த எண்ணெயை குடித்து சென்றன.

இந்த காட்சிகள் அனைத்தும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் தொடர்ந்து நடமாடும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory