» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிப்.14ல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:21:45 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 14ஆம் தேதி பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
பொதுவிநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி பிப்ரவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை 14-02-2026 அன்று நடைபெறும் இக்குறைதீர் முகாமில் கீழ்கண்ட சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.1. புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல்அட்டை கோரி விண்ணப்பித்தல்.
2. குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல்.
3. பொதுவிநியோகத்திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல்.
4. தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளர் உரிய ஆவணங்களான ஆதார் அட்டை, பிறப்பு / இறப்புச் சான்று குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும்.
மேற்படி முகாம் மற்றும் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 9342471314 மற்றும் சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்கள்.1967 மற்றும் 18004255901 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)


