» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்.பி. கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:02:53 PM (IST)
சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
செங்கோட்டை - தாம்பரம் இடையேயான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் "தற்போது செங்கோட்டை - தாம்பரம் இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, பொதுமக்கள் வசதிக்காக தினசரி சேவையாக மாற்ற வேண்டும்.
கோயம்புத்தூரிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் மதுரை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலைச் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பாம்புகோவில் சந்தை ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்க வேண்டும்.
சென்னை - செங்கோட்டை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து புறப்படும் நேரத்தைப் பழைய கால அட்டவணைப்படியே மாற்றி அமைக்க வேண்டும்.
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)


