» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சமூக வலைதளங்களில் பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக கருத்து: யூடியூபர் கைது!

சனி 4, அக்டோபர் 2025 4:10:41 PM (IST)

சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக முகத்தை மூடி பேசி வந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த திலீபன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை மகன் திலீபன் (35), - உளறி கொட்டவா - எனும் தனது யு-டியூப் பக்கத்தில் பெண்களை அவ மதிக்கும் விதமாகவும், பெண் குழந்தைகள் அதிக மாகப் பிறப்பதால் பெற்றோர் பாதிக்கப்படுவதாகவும் கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

மேலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் உரிமையை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகவும் திலீபன் பேசினார்.

தமது முகத்தை பாதியாக மறைத்துக் கொண்டு வீடியோ வெளியிடும் அவர் மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தென்காசி சைபர் கிரைம் பிரிவிற்கு புகார்கள் வந்தன. விசாரணை நடத்திய போலீசார், திலீபனை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory