» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேரன்மகாதேவி வட்டத்தில் பலத்த காற்றில் 60 ஆயிரம் வாழைகள் சேதம்: ஆட்சியர் ஆய்வு
சனி 4, அக்டோபர் 2025 4:50:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை மற்றும் காற்றினால் சாய்ந்த வாழைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், நேரில் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், கூனியூர், வடக்குகாருகுறிச்சி, தெற்கு அரியநாயகிபுரம், வடக்கு வீரவநல்லூர்-1 வடக்குவீரவநல்லூர்-2 கிரியம்மாள்புரம், வடக்கு அரியநாயகிபுரம்-1, திருப்புடைமருதூர் ஆகிய இடங்களில் கனமழை மற்றும் காற்றினால் சாய்ந்த வாழைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று (04.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம் 03.10.2025 அன்று மாலை சுமார் 6.00 - மணியளவில் பெய்த கனமழை மற்றும் சுழல் காற்று கூனியூர், வடக்குகாருகுறிச்சி, தெற்கு அரியநாயகிபுரம், வடக்கு வீரவநல்லூர்-1 வடக்குவீரவநல்லூர்-2 கிரியம்மாள்புரம், வடக்கு அரியநாயகிபுரம்-1, திருப்புடைமருதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 60 ஆயிரம் வாழைகள் சாய்ந்திருக்கலாம் என தெரிய வருகிறது.
எனவே, தோட்டக்கலை துறையினர் மழை மற்றும் காற்றினால் சாய்ந்த வாழைகள் குறித்த கணக்கெடுப்பு பணியினை விரைந்து மேற்கொண்டு, சேதம் குறித்த அறிக்கையினை விரைந்து தயாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தோட்டக்கலைத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வில், சேரன்மகாதேவி வட்டாட்சியர் காஜா கரிபுன் நவாஸ் , தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கப் பணி: பயணிகள் மகிழ்ச்சி!
வியாழன் 9, அக்டோபர் 2025 12:45:42 PM (IST)

கல்லூரி மாணவிகளுக்கான மாநில ஹாக்கி போட்டி: சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
புதன் 8, அக்டோபர் 2025 3:40:06 PM (IST)

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:39:02 PM (IST)

நெல்லையில் அன்புமணியின் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு
திங்கள் 6, அக்டோபர் 2025 12:51:24 PM (IST)

வங்கி மேலாளரிடம் நூதன முறையில் ரூ.47 லட்சம் மோசடி: நெல்லை வாலிபர் கைது!
திங்கள் 6, அக்டோபர் 2025 10:11:45 AM (IST)
